ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா பாகிஸ்தான் உட்பட மொத்தம் எட்டு நாடுகள் இதில் கலந்து கொள்கின்றன.
ஐக்கிய அரபு மைதானத்தில் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.
ஏனெனில் டி20 தொடராக நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடருக்கு ஐபிஎல் -லில் சிறப்பாக ஆடிய வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் என நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களை பிசிசிஐ ஓரம் கட்டிவிட்டது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட சுப்மன் கில் தொடரில் இருந்து விலகலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்போது வைரஸ் காய்ச்சலால் சுப்மன் கில் அவதிப்பட்டு வருகிறார். தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களை இருப்பதால் காய்ச்சலில் இருந்து மீண்டாலும் அவர் இயல்பு நிலைக்கு திரும்ப நாட்கள் ஆகும் என தெரிகிறது.
எனவே அவருக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ விரைவில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








