அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகள்ல இருந்தும் ஓய்வு பெறதா அறிவிச்சிருக்காரு புஜாரா. இது நிச்சயமா இந்திய ரசிகர்களுக்கு ஒரு சோகம் தரக்கூடிய செய்தியாதான் இருக்கும்.
ஏன்னா புஜாராவோட டெஸ்ட் சாதனைகள் அப்படிப்பட்டவை. அப்படி புஜாரா டெஸ்ட்ல என்னென்ன வகையான சாதனைகள் படிச்சிருக்காரு. இதுல தவிர்க்க முடியாத சில முக்கியமான சாதனைகளும் இடம்பெற்றிருக்கு அதோட பட்டியலைதான் இப்ப நம்ம பார்க்க போறோம்.
புஜாராவை பொறுத்தவரைக்கும் பார்த்தோம் அப்படின்னா 2010 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கேட்ல கால்தடம் பதிக்கிறாரு.அவரோட முதல் போட்டி அப்படிங்கறதே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடராதான் அமைஞ்சிருந்தது.
அங்க இருந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவரோட டாமினன்ஸ் அப்படிங்கறதும் தொடங்க ஆரம்பிக்குது. அவரு அதிகப்படியான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரா விளையாடி இருக்காரு. நிறைய சாதனைகளையும் படைச்சிருக்காரு.
குறிப்பா சொல்லணும் அப்படின்னா புஜாராவோட பெயரை கேட்டாலே ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் எல்லாருமே நடுங்குற அளவுக்கான நிறைய சாதனைகள் இருக்கு.
இதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்லணும் அப்படின்னா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில கிட்டத்தட்ட ஃபர்ஸ்ட் ஒரு இன்னிங்ஸ்ல மட்டும் பார்த்தோம் அப்படின்னா 500 பந்துகளுக்கு மேல களத்துல இருந்திருக்காரு புஜாரா.
இந்தியர் ஒருவர் வந்து இந்த மாதிரி 500 பந்துகளுக்கு மேல ஒரு இன்னிங்ஸ்ல களத்துல நின்ன டெஸ்ட் போட்டிகள் அப்படிங்கிறது வந்து எப்பவுமே நடந்ததே கிடையாது .அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க சம்பவத்துக்கு காரண கர்த்தாவா இவரு அமைது இருக்காரு.
இவருக்கு அடுத்த இடத்துலதான் வந்து ராகுல் டிராவிட் கூட இருக்காரு. ஏன்னா அவரு ஒரு இன்னிங்ஸ்ல 495 பந்துகளை எதிர்கொண்டிருக்காரு களத்துல நின்னு. அப்படி டிராவிட் கூட இவரை வந்து ஒப்பிடுவதற்கான காரணம் என்ன அப்படின்னு பார்த்தோம்னா கிட்டத்தட்ட டிராவிட்டோட ஒரு ரீப்ளேஸ்மென்ட்டா தான் இவர் வந்து இந்திய அணியில பார்க்கப்பட்டாங்க.
டிராவிட்ட பொறுத்த வரைக்கும் அவரு 2013 ஆம் ஆண்டு வந்து ஓய்வு பெற்றாரு. இவர் புஜாரா வந்து 2010 ஆம் ஆண்டே உள்ள என்ட்ரி கொடுக்குறாரு. ஆனா அதற்கு அப்புறமா பார்த்தோம் அப்படின்னா அதாவது 2013 க்கு அப்புறமா தொடர்ச்சியா இந்திய அணியில மூன்றாவது வீரர் களம் இறங்கும் வாய்ப்பு அப்படிங்கறது புஜாராவுக்கு கிடைக்குது இவர் உள்ள வந்துட்டாலே பந்து வீசுறவங்க வந்து ரொம்ப
பாவம்பா அப்படின்னு நினைக்கிற அளவுக்குதான் இருக்கும்.
ஏன்னா அவ்வளவு நின்னு நிதானமா அந்த ஒரு உண்மையான டெஸ்ட் கிரிக்கெட் அப்படின்னு சொன்னோம்ல அதற்கான அத்தனை அம்சங்களோடையும் விளையாடக்கூடிய வீரரா இருந்திருக்காரு.








