Home விளையாட்டு “முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிக்கலில் – ரைனா, தவான் சொத்துக்கள் மீது ED நடவடிக்கை”

“முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிக்கலில் – ரைனா, தவான் சொத்துக்கள் மீது ED நடவடிக்கை”

சுரேஷ் ரைனா, ஷிக்கர் தவானின் ₹11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரைனா மற்றும் ஷிக்கர் தவான் ஆகியோரின் ரூ.11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் (ED) முடக்கப்பட்டுள்ளன.

இது, ஆன்லைன் சூதாட்ட செயலி (online betting app) ஒன்றை விளம்பரப்படுத்திய வழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

அமலாக்கத்துறையின் தகவலின்படி, அந்த செயலியை விளம்பரப்படுத்தியதன் மூலம் இரு வீரர்களும் சட்டவிரோத வருமானம் ஈட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, அவர்களது சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.

இந்த வழக்கில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் தொடர்புடையவர்களாக இருப்பதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சுரேஷ் ரைனாவிடம் முன்பே அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய முடக்க நடவடிக்கை, அதற்கான தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், யுவராஜ் சிங், சுரேஷ் ரைனா, ஷிக்கர் தவான் உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சிலரும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களாக இருப்பதாகவும், அவர்களிடம் அமலாக்கத்துறை விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.