Home விளையாட்டு “பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்கும்”

“பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்கும்”

2026 டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்போம் என்ற முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக திரும்ப பெற்றுள்ளது.

முந்தைய நிலையில், வங்கதேச அணிக்கு ஆதரவாகவும், பாதுகாப்பு காரணங்களையும் முன்னிறுத்தி பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்திருந்தது. ஆனால், போட்டியில் பங்கேற்காவிட்டால் கடும் அபராதம் மற்றும் இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என ஐசிசி எச்சரித்தது.

இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் அரசுடன் ஆலோசித்த பிசிபி தலைவர் மோசன் நக்வி, பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பதாக உறுதி அளித்தார்.

ஐசிசி டி20 உலக கோப்பை தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்ட நிலையில், ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடையேயான பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்றப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் வங்கதேச அணி இந்த தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில், அந்த நாட்டின் 200 மில்லியன் ரசிகர்களையும், கிரிக்கெட் சந்தையையும் கருத்தில் கொண்டு வங்கதேச கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஐசிசி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி அளித்துள்ளது.

அதே சமயம், கிரிக்கெட் விளையாட்டின் நலன் மற்றும் ஒருமைப்பாட்டை காக்கும் வகையில் அனைத்து நாடுகளும் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்து, இந்த உலக கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்த இரு தரப்பும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளனர்.