சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீராங்கணை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
இந்தியா சுற்று பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.
மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி நான்காவது போட்டியிலும் இலங்கையை எளிதில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் 80 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தனா புதிய சாதனையை எட்டியுள்ளார். அவர் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களை கடந்த இந்திய வீராங்கணையாக பெயர் பதிவு செய்துள்ளார்.
இந்த பட்டியலில் மிதாலி ராஜ் 10,868 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.








