Home விளையாட்டு ”வறுமை தடையல்ல, மனவலிமையே வெற்றி”

”வறுமை தடையல்ல, மனவலிமையே வெற்றி”

வறுமையில் துவண்ட 17 வயது சிறுவனின் மனவலிமையும் கடுமையான முயற்சியும் இன்று இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை தேடி வந்திருக்கிறது.

எத்தனை கிடைத்தாலும் குறை கூறும் இன்றைய உலகில், மாட்டை வீடு வீடாக அழைத்து சென்று குறி சொல்லும் தந்தையும், வயிற்றுப் பிழைப்பிற்காக ஊசி நூல் விற்கும் தாயும் — இவர்களின் வருமானத்தைப் பொறுத்துதான் அன்று கால் வயிறு சாப்பாடா அல்லது அரை வயிறு சாப்பாடா என்பது தீர்மானிக்கப்படும் அளவிற்கு கொடிய வறுமையை தினமும் கண்டு வளர்ந்தவர் சன்னி ஃபுல்மாலி.

இன்று அவர் ஆசிய இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்துள்ளார்.

புனேயின் லோகேகான் பகுதியில் தனியார் நிலத்தில் கூட குடிசை வீடு என்று சொல்ல முடியாத, கூடாரத்தைப் போல அமைத்து வாழ்ந்து வரும் சன்னிஃபுல் மாலி குடும்பம். மல்யுத்தத்தில் தெரிந்த தனது தந்தை மற்றும் தாத்தாவால் ஈர்க்கப்பட்டு, அவர்களிடமே இக்கலை கற்றார்.

இன்றோ, அந்த சிறுவன் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். 17 வயது மட்டுமே ஆன சன்னிஃபுல் மாலி, வறுமையிலும் கனவுகளை உறுதியாக பற்றிக்கொண்டால் நிச்சயம் ஒருநாள் அது நனவாகும் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணமாக உள்ளார்.