நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டியில் இந்திய வீரர்கள் கை குலுக்கவில்லை என கூறி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பாகிஸ்தான் அணியினர் முறையீடு செய்திருக்கிறார்கள்.
போட்டி முடிந்த பின்பு பாகிஸ்தான் வீரர்கள் கை குழுக்க தயாராக இருந்ததாகவும் இந்திய வீரர்கள் கை குழுக்கவில்லை எனவும் அவர்கள் முறையிட்டருக்கிறார்கள்.
நேற்று அந்த போட்டி தொடங்கு போதும் சரி அல்லது இந்திய அணி வெற்றி பெற்ற பிறகும் சரி கஸ்டமரி ஹேண்ட்ஷேக் என்று சொல்லுவார்கள். அதாவது போட்டியானது தொடங்குவதற்கு முன்பும் முடிந்த பிறகும் இரு அணி வீரர்களும் கை குலுக்கி கொள்வர்.
ஆனால் நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் மேட்சின் போது டாஸ் முடிந்தவுடன் இரு கேப்டன்களும் அதாவது இந்திய கேப்டன் கை குழுக்கவில்லை. அதை தொடர்ந்து மேட்ச் வெற்றி பெற்ற பிறகும், வழக்கமாக அந்த வெற்றி அந்த ரன்களை அடித்த பிறகு, அங்கு இருக்கக்கூடிய வீரர்களிடம் கைக்குலுக்கிய பின்னரே அவர்கள் திரும்பி அவர்கள் அறைக்கு செல்வர்கள்.
ஆனால் நேற்று வின்னிங் ரன்ஸ் இறுதி ரன்களை அடித்துவிட்டு நேரடியாக அவர்கள் அறைக்கு சென்றுவிட்டனர். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் அங்கு இந்திய வீரர்கள் வருவார்கள் என்று காத்திருந்தனர்.
அவர்கள் வராதால் தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முறையிட்டுருக்கிறது. இது சரியானது அல்ல ஒரு ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பில் இது நடக்கவில்லை என்ற ஒரு முறையீட்டை தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் வைத்திருக்கிறது.








