இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர். 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரையும் கட்டம் கட்டுவதற்கு பல்வேறு உள்ளடி வேலைகளை அவர் பார்த்து வருகிறார்.
உள்ளூர் தொடர்களில், ஆடி விராட் மற்றும் ரோகித் இருவரும் தங்களை நிரூபிக்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விடுத்துள்ளார்.
இதற்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா, விஜய் ஹசாரை தொடரில் விளையாடி சதமடித்து, தங்கள் அணிக்கு வெற்றி உறுதி செய்துள்ளனர். குறிப்பாக கோலி 15 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இது கௌதம் கம்பீருக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. இந்நிலையில், 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடுவாரா என்பதில், அவரின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: விராட் இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை உள்ளது. வேறு யாரும் அவரைப் போல இந்தியாவுக்காக இத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றவரில்லை என்று நான் நினைக்கிறேன்.
அவர் என் மாணவர் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை உள்ளது. இதை விட பெரிய பெருமை என்ன இருக்க முடியும்? விராட் கோலி அற்புதமான ஃபார்மில் உள்ளார்.
அவர் மிக சிறப்பாக பேட்டிங் செய்து, டெல்லியின் வெற்றியை உறுதி செய்தார். நீண்ட காலத்திற்கு பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி, அதிலும் சிறப்பாக செயல்பட்டார்.
அவர் இந்திய அணியில் மிகவும் நிலையான வீரர் மற்றும் 2027 உலகக் கோப்பைக்கு முழுமையாக தயாராகி உள்ளார்.








