Home தமிழகம் “தமிழகத்தில் பரவும் புதிய அச்சம்? காகங்களில் H5N1 வைரஸ் கண்டுபிடிப்பு”

“தமிழகத்தில் பரவும் புதிய அச்சம்? காகங்களில் H5N1 வைரஸ் கண்டுபிடிப்பு”

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்துக்குள் உள்ள நவகாச்சியாவில் கடந்த 11 ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் ஒரே நேரத்தில் கொத்து கொத்தாக செத்து போன சம்பவம் அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளது.

அதற்குப் பிறகு செத்த காகங்களின் உடல்களை எடுத்துச் சென்று பரிசோதனைக்காக ஆய்வு செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் நடந்த காகங்கள் செத்து போவது போன்ற நிகழ்வுகளின் முன்னோடியாக மக்களுக்கு பெரிய பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, சென்னை அடையார், காந்திநகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மையூர், ஈஸ்ட் கோஸ்ட் ரோடு, ஓஎம்‌ஆர் ரோடு போன்ற பல இடங்களில் தொடர்ச்சியாக காகங்கள் செத்து கிடந்தது என்று தகவல்கள் வந்துள்ளன.

இதற்கு பின் செத்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய் தடுப்பு புலனாய்வு குழு கடந்த மாதம் சேகரித்தது. பின்னர் அவற்றை தேசிய விலங்குகள் நோய் கட்டுப்பாட்டு ஆய்வு நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

இப்போ அந்த சோதனையின் முடிவுகள் வெளியாகி, பொதுமக்களில் மேலும் அதிக பீதியை உருவாக்கியுள்ளது. சோதனை முடிவுகள் கூறுவது: சென்னை அடையார் பகுதியில் செத்த காகங்களின் மாதிரிகள் ஜனவரி 21 ஆம் தேதி தமிழக அரசின் மையத்துக்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டதில் H5N1 ஏவியன் இன்புளுவென்சா என அழைக்கப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதியானது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோய் கோழிகள் மற்றும் பிற பறவைகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பரவக்கூடிய தன்மை கொண்டது. அதனால் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் அனைத்து இடங்களிலும் வைரஸ் பரவாமல் இருக்க தீவிர கண்காணிப்பு வேலைகள் தேவைப்படுகின்றன.

பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவக்கூடியதால் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு தகவல் வழங்கியுள்ளது.

பறவைகள் செத்தால் என்ன செய்ய வேண்டும்?

  • உங்கள் பகுதியில திடீரென பறவைகள் செத்து கிடைத்தால் உடனே கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
  • செத்து கிடக்கின்ற பறவைகள் மற்றும் விலங்குகளை வெறும் கைகளால் தொட கூடாது.
  • பறவைகள் செத்தால், சரியான முறையில் ஆழமான குழி தோண்டி புதைக்க வேண்டும்.
  • கோழிப் பண்ணைகளில் வெளி ஆட்களை அனுமதிக்க கூடாது.
  • ஒரு கோழி பண்ணையில் வேலை செய்யும் வாலர்கள் வேறு பண்ணைகளுக்கு போக வேண்டாம்.
  • பிற மாநிலங்களில் இருந்து கோழிகள் அல்லது கோழி இறைச்சியை கொண்டு வர கூடாது.
  • தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரமாக செய்ய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.