Home தமிழகம் அம்பத்தூரில் அதிர்ச்சி – மூதாட்டி வீட்டிற்கு 8.38 லட்சம் மின்கட்டணம்!

அம்பத்தூரில் அதிர்ச்சி – மூதாட்டி வீட்டிற்கு 8.38 லட்சம் மின்கட்டணம்!

அம்பத்தூரில் ஒரு மூதாட்டி வீட்டிற்கு 8 லட்சத்து 38,747 ரூபாய் மின்கட்டணமாக வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியில் வசித்து வரும் ராணி என்ற மூதாட்டியின் வீட்டிற்கு 3000 முதல் 5000 ரூபாய் வரை மின்கட்டணம் வருவது வழக்கம்.

இந்த மாத கணக்கீட்டின் படி 7,324 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாக 8 லட்சத்து 38,747 மின்கட்டணம் வந்துள்ளது. அதேபோல் பாடி பகுதியில் உள்ள சிலருக்கும் லட்சக்கணக்கில் மின்கட்டணம் வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதுபோல் சம்பவம் நடந்து உள்ளதாக மூதாட்டியின் மகள் மணிமேகலை குற்றம் சாட்டி உள்ளார்.

ஊழியர் தவறுதலாக மின் பயன்பாட்டு அளவை எழுதி உள்ளதாகும். இது சம்பந்தமாக மின்ஊழியரை பணியிடை நீக்கம் செய்து உரிய விளக்கம் கேட்டு உள்ளதாகும். திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் சித்ரா சௌந்தரபாண்டியன் விளக்கம் அளித்து உள்ளார்.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.