தேர்தலின் போது பாமக-வில் இருதரப்பு பிரச்சனை இருந்தால் கட்சி சின்னம் முடக்கி வைக்கப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், பாமக தலைவர் அன்புமணி என குறிப்பிட்டு சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால் போலி ஆவணம் கொடுத்து பாமக -வை அபகரித்ததாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதன் விசாரணையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தால் பாமக காவில் யார் அங்கீகரிக்கும் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் ஏற்கும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்தது.
அதில், “எங்களிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் அன்புமணியை தலைவராக ஏற்றோம். இதில் பிரச்சனை இருந்தால் அவர்கள் உரிமைகளை நீதிமன்றத்தை நாடலாம்” என தெரிவிக்கப்பட்டது.
பாமக கவில் தலைமை பிரச்சனை நீடித்து வருகிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பிரச்சனை தொடர்ந்தால், படிவம் ஏ பி ஆகிய இரண்டிலும் இருதரப்பும் கையெழுத்து போடுவதை ஏற்க இயலாது. எனவே, ராமதாஸ் தரப்பிற்கோ அன்புமணி தரப்பிற்கோ மாமழம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








