ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலையம் அருகே வைத்து இளைஞரை வெட்டிக்கொன்ற திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்து உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினி இவரது கணவர் சுதாகர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அபினேஷ் என்ற வாலிபருடன் முன்விரோதம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி சுதாகர் வீட்டின் முன்பு சுதாகரை கத்தியால் சரமாறியாக அவினேஷ் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சுதாகர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக அவினேஷ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நீதிமன்ற ஜாமினில் ரத்தினகிரி காவல் நிலையத்தில் நாள்தோறும் கையொழுத்து இட நிபந்தனை ஜாமீன் பெற்று கடந்த ஒரு வார காலமாக ரத்தினகிரி காவல் நிலையத்தில் அவினேஷ் கையொப்பமிட்டு வநதார்.
இந்நிலையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையொப்பமிட வந்த அவினேஷை நோட்டமிட்ட நான்கு பேர் கொண்ட கும்பல் அவனை துரத்தி சென்று ஓட ஓட காவல் நிலையம் அருகாமையிலேயே கத்தியால் சரமாறியாக வெட்டியது.
இதில் படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அவினேஷை மீட்ட ரத்தினகிரி போலீசார் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
அந்த சிகிச்சை பலன் இன்றி அவினேஷ் உயிரிழந்தார் அவினேஷை வெட்டிய அரக்கோணம் ஒன்றிய கவுன்சிலர் கணவரான சுதாகர் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியுடன் ரத்தினகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை டிஎஸ்பி எம்மரவர்மன், ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








