Home தமிழகம் “புற்றுநோய் பாதிப்பு, மன அழுத்தம்… குடும்பம் 3 உயிர்களை இழந்தது”

“புற்றுநோய் பாதிப்பு, மன அழுத்தம்… குடும்பம் 3 உயிர்களை இழந்தது”

கோவை அருகே மத்தம் பாளையம் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரியநாயகன்பாளையம் அருகே உள்ள கதிர்நாயகன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜூனியர் இன்ஜினியராக கமலேஷ் பணியாற்றி வந்தார். இவருக்கு இலக்கியா என்ற மனைவி மற்றும் எக்சுதா ஏஞ்சல் என்ற 10 வயது மகளும் உள்ளனர்.

தகவல்களின் படி, மனைவி இலக்கியா இரத்தப் புற்றுநோயால் பல வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார், இதனால் குடும்பத்தில் மனஅழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கமலேஷ், நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பி, மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூவரின் உடல்களை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.