Home தமிழகம் “சென்னை சென்ட்ரல்–கோயம்பேடு வழி மெட்ரோ சேவை ரத்து”

“சென்னை சென்ட்ரல்–கோயம்பேடு வழி மெட்ரோ சேவை ரத்து”

சென்னை சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சேவை காலவரை இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்காப்படுகின்றனர்.

சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. இதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக, அண்ணாநகர்–கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, நீலநிற வழித்தட விமான நிலைய சேவையை பயன்படுத்தலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதே சமயம், பச்சை வழித்தடமான சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும், நீல வழித்தடமான வேங்கோநகர் முதல் விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில் சேவை வார நாட்களுக்கு ஏற்ப அட்டவணைப்படி இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.