உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ மாணிக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் குளித்தலை மாணிக்கம், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்எல்ஏ மாணிக்கத்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்.








