Home தமிழகம் ”தமிழ்நாட்டு கோயில்களின் அழகில் மெய்மறந்த ஜப்பானிய பெண்கள்”

”தமிழ்நாட்டு கோயில்களின் அழகில் மெய்மறந்த ஜப்பானிய பெண்கள்”

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலுக்கு டோக்கியோவைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ராகு தலமாகப் போற்றப்படும் அந்தக் கோயிலில் தரிசனம் செய்த அவர்கள், தமிழ்நாட்டு ஆலயங்களின் கட்டிடக்கலை அற்புதமாக இருப்பதாகவும், ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் நிகழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் கார்த்திகை மாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் ஐயப்ப சுவாமி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.