Home தமிழகம் காட்டுப்பகுதியில் சிறுமியின் கதறல்… இரு இளைஞர்களின் கொடூரம் வெளிச்சம்!

காட்டுப்பகுதியில் சிறுமியின் கதறல்… இரு இளைஞர்களின் கொடூரம் வெளிச்சம்!

கடலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். காட்டுமன்னார் கோவில் அருகே ரம்ஜான் தைக்கால் பகுதியைச் சேர்ந்த கார்த்தி மற்றும் குருமூர்த்தி என்ற இரு நண்பர்கள், வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கார்த்தி மற்றும் குருமூர்த்தி இருவர்மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.