Home தமிழகம் “கரூர் சம்பவம்: தவறாக பேசுவது வேதனை தருகிறது” – அமைச்சர் அன்பில் மகேஷ் உருக்கம்

“கரூர் சம்பவம்: தவறாக பேசுவது வேதனை தருகிறது” – அமைச்சர் அன்பில் மகேஷ் உருக்கம்

கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிலர் தவறாக பேசுவது வருத்தமாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நம் கண்முன்னே பள்ளி மாணவர்கள் உயிரிழந்த நிலையில் தூக்கி வரப்படுவதை பார்த்தால், எந்த மனிதனாக இருந்தாலும் மன வேதனை ஏற்படாமல் இருக்க முடியாது. தலைவராக இருந்தாலும் ,கூட அது மன வேதனையே தரும்” எனக் கூறினார்.

“நான் நாகப்பட்டிணத்தில் இருந்தபோது சம்பவச் செய்தி கிடைத்ததும் உடனடியாக கரூருக்கு புறப்பட்டேன். அங்கு சென்றடைந்தது இரவு 10 மணிக்கே. அப்போதுதான் சம்பவத்தின் முழு விவரம் எனக்குத் தெரிய வந்தது.

மேலும், இந்த சம்பவத்தை ஆராய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால், அதில் அனைவரின் கருத்துக்களும் பதிவுசெய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.