கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதனிடையே முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் தற்போதைய நிலையை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் உடனடியாக தற்போது அந்த மருத்துவமனை சென்று எவ்வாறான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் மக்கள் நல்வாழ்த்துறதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இதை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகிய இருவரும் உடனடியாக கரூர் சொல்வதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகள் முழுமையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 15 பேருக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மூன்று பேர் மிக கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
கரூர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் முதல்வர் ஸ்டாலின் கடுமையான கண்காணிப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தகவல் கிடைக்கும்போதே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக அனைத்து அரசாங்க மற்றும் காவல் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.








