கரூரில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக எம்பி கனிமொழி கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடக்க நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டிலும் செப்டம்பர் 17 ஆம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்று வருகின்றது.
அந்த அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய முப்பெரும் விழாவிலே வழக்கம் போல் பெரியார் விருது அண்ணா விருது கலைஞர் விருது பாவேந்தர் விருது பேராசிரியர் விருது மு.க ஸ்டாலின் விருது என விருதுகளுக்கான பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது.
அதன்படி பெரியார் விருதுக்கு திமுக வினுடைய துணை பொதுச்செயலாளரும் திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.
அண்ணா விருதுக்கு திமுகவினுடைய தணிக்கை குழுவிலே முன்னாள் உறுப்பினரான பழையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவராக இருந்த சுப சீதாராமன் அண்ணாவிருதுக்கு தேர்வாகி இருக்கின்றார்.
அதேபோன்று அண்ணாநகர் பகுதியினுடைய செயலாளராக இருந்த அண்ணாநகர் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினரான சோமா ராமச்சந்திரன் அவர்களுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டிருக்கின்றது.
குளித்தலை சிவராமன் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கின்றார். குளித்தலையினுடைய ஒன்றிய குழு பெருந்தலைவராக இருந்தவர். அவருக்கு பாவேந்தர் விருதும் ,மருதூர் ராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருதும் ,பொங்கலூர் பழனிச்சாமிக்கு மு.க ஸ்டாலின் விருதும் வழங்கப்பட உள்ளது.








