சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவிலம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாத். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் படுக்கையறையில் இருந்த ஏசி நள்ளிரவில் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தினர் நல்வாய்ப்பாக அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், படுக்கையறையில் இருந்த அனைத்து பொருட்களும் தீக்கிரையாகி சேதமடைந்தன.
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








