Home தமிழகம் மாணவர் நலனை காக்கும் எச்சரிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை கண்டித்தது”

மாணவர் நலனை காக்கும் எச்சரிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை கண்டித்தது”

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதள பக்கத்தை திறக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தூவங்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கல்விஉரிமை சட்டத்தின்படி மத்திய அரசு உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கவில்லை எனக் கூறாமல், தனியார் பள்ளிகளுக்கு நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் கடந்த ஜூன் மாதம் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என பள்ளி கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் தனியார் பள்ளிகள் இயக்குனர் குப்புசாமி ஆகியவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் வி .லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில் தேசிய கல்வி கொள்கையை அமுல்படுத்த மறுத்ததால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும் மாநில அரசு தனது பங்கான 40% நிதியை ஒதுக்க தயாராக உள்ளபோதும் மத்திய அரசு 60% நிதியை ஒதுக்காததால் கல்வி உரிமை சட்டத்தை அமுல்படுத்த இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர்நீதிமன்ற உத்தரவு வேண்டுமென்றே அவமதிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. விசாரனையின் பொழுது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே. ரவீந்திரன் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சம பொறுப்பு உள்ள போதிலும் மாநில அரசுக்கு எதிராக மட்டுமே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அந்த வழக்கு செப்டம்பர்ஏழாம் தேதி விசாரணைக்கு வரும என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார் .

இந்த நிலையில் கல்வி ஆண்டு துவங்கி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் விண்ணப்பத்திற்கான இணையதல பக்கத்தை ஏன் இன்னனும் திறக்காமல் இருப்பது ஏன் எனவும்,

மத்திய மாநில அரசுகள் இடையில் நிதி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை காரணமாக மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் மேலும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு கௌரவம் பார்க்காமல் இணையதல பக்கத்தை பிறக்க வேண்டும் என நீதிபதிகள் தமிழக அரசை கேட்டுக்கொண்டனர் .

இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் தமிழக அரசு மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும் அரசுக்கு இதில் எந்த கௌரவ பிரச்சனையும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார் இதனை அடுத்து இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை செப்டம்பர் ஒன்பதாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.