Home தமிழகம் “மாணவர் விவரங்கள் ஆன்லைனில் – தவறாமல் பதிவு செய்ய வேண்டும்!”

“மாணவர் விவரங்கள் ஆன்லைனில் – தவறாமல் பதிவு செய்ய வேண்டும்!”

மாணவர்களின் விவரங்களை எமிஸ்தளத்தில் விரைவில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கும் உயர்கல்வி சேர்க்கையினை உறுதி செய்யும் வகையிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் சார்ந்த விவரங்கள் பள்ளி கல்வித்துறை எமிஸ்தலத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களின் விவரங்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், மாணவர்களின் விவரங்களை எமிஸ்தளத்தில் அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், இதனை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும் எனவும் கூறியுள்ளது.