விருதுநகர் மாவட்டம் வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வகுப்பறை கட்டுமானப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார்.
அதையடுத்து, பள்ளி மாணவ மாணவிகளுடன அமைச்சர் உரையாடினார், அப்போது 11ஆம் வகுப்பு மாணவி வெயில்கணி, நெகிழி பைகள் இயற்கைக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் அறிவியல் பூர்வமாக பதிலளித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு, “நெகிழியின் பயன்பாடு அதன் தன்மை மற்றும் அடர்த்தியைப் பொறுத்து இருவிதம் உள்ளது. குறிப்பிட்ட அளவு மைக்ரான் கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுச்சூழலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.
மேலும், “பிளாஸ்டிக் பொருளின் மைக்ரான் அடர்த்தியே சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தீர்மானிக்கிறது. 50 மைக்ரானுக்கு குறைவான அடர்த்தியுள்ள பிளாஸ்டிக் தான் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால்தான் அரசு அவற்றை முற்றிலுமாக தடை செய்துள்ளது,” என்றும் விளக்கமளித்தார்.








