மான்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களே மூணாவது முறையா ஒன்றியத்தோட ஆட்சி அதிகாரத்தை நீங்கதான கையில் வச்சிருக்கறீங்க.
நீங்க ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா இல்ல நம்மளுடைய இந்த இஸ்லாமிய நண்பர்களுக்கும் இஸ்லாமிய தோழர்களுக்கும் எதிரா சதி செய்யவா.
மக்களுக்கு உங்ககிட்ட கேட்கறதுக்குன்னு ஏராளமான கேள்விகள் இருக்குது அதனால அவங்க சார்பா அவங்களல ஒருத்தனா அவங்களோட ஒரு உண்மையான ஒரு பிரதிநிதியா உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கணும் . நம்ம தமிழ்நாட்டு மீனவர்கள் கிட்டத்தட்ட ஒரு 800 பேருக்கு மேல இலங்கை கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டிருக்கிறாங்க.
அதை கண்டிக்கிறதுக்காக உங்களை பெருசா எதுவும் செய்ய சொல்லல சின்னதா ஒன்னே ஒன்னு மட்டும் செஞ்சு கொடுங்க இனிமேலா எங்களுடைய மீனவர்கள் பாதுகாப்பா இருக்கறதுக்காக இந்த கட்ச தீவை இலங்கை கிட்ட இருந்து மீட்டு கொடுத்துருங்க .
உங்களுடைய இந்த முரட்டு பிடிவாதத்தால நீங்க நடத்துற இந்த நீட்டு தேர்வு அதனால இங்க என்னென்ன நடக்குதுன்னு சொல்றதுக்கு மனசு வலிக்குது.
அதனால அந்த நீட்டு தேர்வே தேவையில்லைன்னு அறிவிச்சிருங்க செய்வீர்களா திரு நரேந்திரபாய் தாமோதர் மோடிஜி அவர்களே
எங்களுக்கு என்னென்ன தேவையோ என்னென்ன நல்லதோ அதெல்லாம் செய்ய மாட்டடிங்கறீங்க ஆனா ஆட்சி அதிகாரத்தை மட்டும் கையில வச்சுக்கிட்டு மக்களை ஏமாத்த நேரடியாக ஒரு பாசிச பாஜக அடிமை கூட்டணி ஒன்னு அடுத்து உங்களுடைய இந்த மைனாரிட்டி ஆட்சியை ஓட்டுறதுக்காக மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ் அடிமை குடும்பம்னு இன்னொரு கூட்டணி.
இப்படி மக்கள் சக்தியே இல்லாத இந்த ஊழல் கட்சிகளை மிரட்டி அடிபணிய வச்சு 2029 வரைக்கும் சொகுசு பயணம் போயிடலாம்னு திட்டம் தீட்டி வச்சிருக்கீங்க .
என்னதான் நீங்க இந்த நேரடி மறைமுக கூட்டணி குட்டி கரணம் போட்டாலும் தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவாங்க .
இங்க ஒரு எம்பி சீட்டு கூட தரல என்றதுக்காக தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதுவுமே செய்யாம ஓரவஞ்சனை செய்யுது இந்த ஒன்றிய பாஜக அரசு.
சங்கம் வச்சு தமிழ் வளர்த்த மண் இந்த மதுரை மண். அதனால இங்க அந்த கீழடியில் கிடைச்ச ஆதாரங்களை எல்லாம் மறைச்சிட்டு எங்க நாகரிகத்தையும் எங்க வரலாறையும் அழிக்கறதுக்காக உள்ளடி வேலை செய்யலாம்னு
நினைக்கிறீங்க.
தமிழ்நாட்டை தொட்ட என்ன நடக்கும்னு நீங்க பல உதாரணங்கள் இருக்குது. அதனால இதையெல்லாம் மறைச்சிட்டு எங்க மக்களை ஏமாத்திட்டலாம்னு மட்டும் நினைக்காதீங்க.
மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற இந்த மதுரை மண்ணிலிருந்து சொல்றேன் உங்க எண்ணம் எல்லாம் ஒரு நாளும் ஈடேறாது.








