Home தமிழகம் முன்பதிவு திறந்த உடன் நடந்த சம்பவம்— பயணிகள் அதிர்ச்சி!

முன்பதிவு திறந்த உடன் நடந்த சம்பவம்— பயணிகள் அதிர்ச்சி!

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், 10 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் பெருமளவில் போட்டியிட்டு முன்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை, 15ஆம் தேதி பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17ஆம் தேதி காணும் பொங்கல் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இதனை முன்வைத்து அந்த நாட்களுக்கு ஊர் செல்ல பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக 120 நாள் முன்பதிவு முறை 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளன.

எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரின் முன்பாக இன்று காலை 4.00 மணி முதலே நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர். ஆனால் பெரும்பாலான பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ததால், கவுண்டரில் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் முடிந்து விட்டன. இதனால் வரிசையில் நின்ற பயணிகளில் பலருக்கு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் டிக்கெட்களும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை (15ஆம் தேதி) பொங்கல் தினத்திற்கான, நாளை மறுநாள் (16ஆம் தேதி) மாட்டுப் பொங்கலுக்கான டிக்கெட் முன்பதிவும் காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளதால், அப்போதும் அதிகமானோர் முன்பதிவுக்காக கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்ததால் கவுண்டர் வெளியே நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.