Home தமிழகம் ”மகிழ்ச்சி “ நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு :

”மகிழ்ச்சி “ நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு :

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் 26 ஆம் தேதி முதல் நகர்புற பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் பின்னர் ஊரக பகுதிகளில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தொடர்ந்து நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 26 ஆம் தேதி தொடங்கி வைத்துவுள்ளார்.

காலை உணவு திட்ட விரிவாக்க மூலம் நகர்ப்புறங்களில் உள்ள 2430 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்து 5,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.