Home தமிழகம் “செல்லப் பிராணிகளுக்கு உரிமம் இல்லையா? இன்று முதல் ₹5,000 அபராதம்!”

“செல்லப் பிராணிகளுக்கு உரிமம் இல்லையா? இன்று முதல் ₹5,000 அபராதம்!”

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற அளிக்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், உரிமம் பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த, கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 1,05,556 செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 57,626 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,930 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

உரிமம் பெறுவதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், உரிமம் பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக பூங்கா சாலை உள்ளிட்ட பொது இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என்றும், அதன் பின்னர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.