Home தமிழகம் பள்ளியில் இரவு நேர மர்ம பூஜை… அச்சத்தில் மாணவர்கள்

பள்ளியில் இரவு நேர மர்ம பூஜை… அச்சத்தில் மாணவர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசு உயர்நிலை பள்ளியில் மர்ம நபர்கள் மாந்திரீக வேலைகள் செய்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோரை அச்சமடைய செய்துள்ளது.

நன்னாவரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சனிக்கிழமை இரவு அத்து மீறி உள்ளே நுழைந்த சிலர் மஞ்சள் குங்குமம் மற்றும் பொம்மை வைத்து பூஜை செய்துவிட்டு சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வகுப்புக்காக பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அங்கிருந்த பொருட்களை கண்டு அச்சமடைந்தனர்.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.