மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானம் ரன்வேயில் தர இறங்கிய போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.
ஓடு பாதையில் சரக்கு விமானம் தரை இறங்கிய போது விமானத்தின் நான்காவது என்ஜினில் தீப்பற்றி விபத்து நேரிட்டிருக்கிறது. என்ஜினில் தீப்பிடித்த நிலையிலும் சரக்கு விமானத்தை விமானிகள் பத்திரமாக தரை இறக்கி இருக்கிறார்கள்.
கோலாலம்பூரியிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானம் தரை இறங்கிய பொழுது நாலாவது இன்ஜினில் தீபத்தானது ஏற்பட்டுள்ளது. இதை பத்திரமாக விமானி கண்காணித்து தரை இறக்கியுள்ளார்.
அதாவது கோளாரம்பூரியிலிருந்து சரக்குகளை ஏற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு வழக்கமாக வரும் சரக்கு விமானம் வழக்கம் போல் இன்றும் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சரக்கு இறங்குவதற்கு முன்னதாகவே
இன்ஜினில் கோளாறு இருக்கிறது கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் தரை இறங்கிய பிறகு அந்த சரக்கு விமானத்தில் நான்காவது இன்ஜினில் இருந்து தீ ஏற்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பத்திரமாக கரை இறக்கிய விமானி உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் உடனடியாக அந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அந்த விமானத்தை ஓடு பாதையிலிருந்து தனியாக நிறுத்தி அந்த தீ விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர் .
இதுவரையில் இந்த மாதிரியான சரக்கு விமானத்தில் ஓடு பாதைகளில் ஏற்படவில்லை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இது போன்ற விபத்துக்கள் ஏற்படவில்லை என்றும் விமான நிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீண்ட வழியாக பயணித்து வந்தாலும் இந்த விமானத்தில் ஏற்பட்டுள்ள இன்ஜின் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .நல்ல வேலையாக விமானம் சென்னை விமான நிலையத்தின் அருகில் வரும்போது இந்த கோளாறு காரணமாக விபத்தானது ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இந்த தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விமானம் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டு சோதனையானது மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.








