Home தமிழகம் ” ரயில் மறியல் ” நெருங்கிய ரயில் – அசராத மீனவ பெண்கள் :

” ரயில் மறியல் ” நெருங்கிய ரயில் – அசராத மீனவ பெண்கள் :

ராமேஸ்வர மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் இசைப்படகு மீனவர்களை விடுதலை செய்ய கோரி இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரம் சென்ற தாம்பரம் விரைவுரயிலில் அவர்கள் மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவருடம் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜர் அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் ராமநாதபுரம் கோட்டாட்சியர் ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதை அடுத்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக மீட்டு தாயகம் கொண்டுவர மத்திய மாநில அரசுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இவர்களிடம் உறுதி அளித்ததை அடுத்து தற்போது அந்த மறியல் போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டுள்ளார்கள்.

இதனை அடுத்து சுமார் ஒரு மணி நேர தாமதத்துக்கு பின்பு தாம்பரம் விரைவு ரயிலானது தற்போது தங்கச்சி மடத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

இதனால் ரயிலில் வந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உடனடியாக மத்திய மாநில அரசுகள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க போவதாக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.