சென்னை திருவெற்றியூர் பனிமனையில் நடத்துனராக பணியாற்றி வந்த 54 வயதான ரமேஷ் என்பவர் பனிமனை அலுவலகத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.
உயர்நீதிமன்றத்திலிருந்து திருவெற்றியூர் வரை இயக்கப்படும் பேருந்தில் பணியில் இருந்த ரமேஷ். பேருந்தில் வரும்போதே மூச்சு திணரல் இருப்பதாக ஓட்டுனரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
பணிமனை சென்று நேரம் குறித்துவிட்டு மருத்துவமனைக்கு செல்ல திட்டமிட்டிருந்த ரமேஷ் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.








