தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 234 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால், தற்போது தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு தொகுதியுக்கும் சராசரியாக இரண்டு தேர்தல் அதிகாரிகளும், நான்கு துணை அதிகாரிகளும் — மொத்தம் ஆறு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், தற்போது அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொடர்ந்து, ஒவ்வொரு தொகுதிக்கும் நுண் பார்வையாளர்கள், தொழில்நுட்ப பார்வையாளர்கள் போன்றோரையும் நியமிப்பது வழக்கம். முதற்கட்டமாக தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர், அவர்களுக்குள் வரும் தொகுதிகளின் முதன்மை தேர்தல் பொறுப்பாளராக செயல்படுவார்.
அதன்படி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் கீழும் இந்த 234 தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டிற்கு தேர்தல் பொருட்கள் வாங்குவதற்கான டெண்டரும் ஏற்கனவே அறிவித்துள்ளது.
மேலும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் தற்போது 74 தொகுதிகளுக்கான அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.








