அமெரிக்கா விதித்த 50%த வரிவிதிப்பால் பனியன் தொழில் உளிட்ட பல்வேறு தொழில்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தடுக்காத மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக எம்.பி ஆர்.ராசா தலைமையில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தற்பொழுது திருப்பூர் பின்னலாடையை பொறுத்தவரை ஏற்றுமதியில் 45000 கோடி ஆண்டுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் இதில் குறிப்பாக 15000 கோடி ஆண்டுக்கு திருப்பூர் நேரடியாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் 50% வரிவிதிப்பு காரணமாக வந்து கிட்டத்தட்ட 30 முதல் 40% பின்னலாடை நிறுவனங்கள் முழுமையாக பாதிப்படைகிறது இதன் காரணமாக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிப்புக்கு உள்ளாக உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு இப்பகுதியை சேர்ந்த தொழில் துறையினர் வைத்து வந்த சூழ்நிலையில் இன்றைய தினத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக இன்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.
குறிப்பாக மத்திய அரசு தமிழகத்தை கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக பின்னலாடை நிறுவனங்களில் இருக்கக்கூடிய தொழில் மற்றும் பல்வேறு தொழில்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக கூறி தற்போது நீலகிரி எம்.பி ஆர் ராசா தலைமையில் தற்பொழுது கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி கட்சிகளில் இருந்து உள்ளிட்ட கட்சி தலைவர்கள் விசிகா தலைவர் திருமாவளவன் மதிமுக தலைவர் வைகோ மற்றும் செந்தில் பாலாஜி காங்கிரஸ் சார்பாக கே.வி தங்கபாலு உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் அனைவருமே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டன உரையை தெரிவித்து வருகின்றனர்








