Home தமிழகம் “திருப்பூர்: அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை”

“திருப்பூர்: அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை”

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றங்கரையோர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்த அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

அணையின் நீர் மட்டம் வரைவில் 88 அடியை எட்டக்கூடும் என்பதால், அணையிலிருந்து அதிகமான உபரிநீர் எந்நேரத்திலும் திறக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், அமராவதி ஆற்றங்கரையோர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.