ஜனவரி 19ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொடர்பான அறிவிப்பை திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வெளியிட்டுள்ளார். அவர் தலைமையில் இந்த மகளிரணி மாநாடு நடைபெறும் என்றும், இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக சார்பில் அணி ரீதியாக ஒவ்வொரு நிர்வாகிகளும் ஆலோசனைகள் மற்றும் மாநாடுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில், ஏற்கனவே மேற்கு மண்டலத்தில் திமுக மகளிரணி மாநாடு நடத்தப்பட்ட நிலையில், தற்போது “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு ஜனவரி 19ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறும் என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாட்டில் அவர் சிறப்புரை ஆற்றுவார் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேற்கு மண்டலத்தில் திமுக மகளிரணி மாநாடு நடத்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது டெல்டா மண்டல மகளிரணி மாநாடு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற அடிப்படையில், தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்குவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இளைஞரணி மாநாடுகள் நடைபெற்று வரும் நிலையில், மகளிரணி மாநாடுகளும் மண்டல வாரியாக திமுகவால் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது மாநாடாக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.








