Home தமிழகம் ஆஹா அடித்து ’’ ஜாக்பாட்’’ தாம்பரம் மக்களுக்கு .

ஆஹா அடித்து ’’ ஜாக்பாட்’’ தாம்பரம் மக்களுக்கு .

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் புதியதாக அமைக்கப்பட்ட அரசு தலைமை மருத்துவமனை பல் மருத்துவமனை முதலியவற்றை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்திற்கான மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 110 கோடி மதிப்பீட்டிலே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுடைய அந்த அறிவிப்புக்கு ஏற்ப கட்டப்பட்டு தற்பொழுது திறக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அரசு தலைமை மருத்துவமனையை பொறுத்தவரை ஏறக்குறைய ஐந்து ஏக்கர் நிலப்பரப்பிலே அமைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 2021- 22 நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டதற்கு ஏற்ப 5 கோடி அதாவது 5 ஏக்கர் நிலப்பரப்பிலே 110 கோடி மதிப்பீட்டிலே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டிருக்கின்றது.

அதை முதலமைச்சர் தற்போது திறந்து வைத்திருக்கின்றார். இந்த தலைமை மருத்துவமனை கட்டடத்தை பொறுத்தவரை ஏழு அறுவை சிகிச்சை மையங்கள் 111 படுக்கைகள் மற்றும் 289 பொதுப்பிரிவு படுக்கைகள் என மொத்தமாக 400 மருத்துவ படுக்கை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

தலைத்தளம் மற்றும் முதல் தளத்திலே புறநோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேன் பிரிவு, இரண்டாவது தளத்திலே மகப்பேறு பிரிவு, அதற்கு மேலே பச்சிலம் குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள் ஆய்வகம் ,தீக்காய பிரிவுகள் ,அறுவை சிகிச்சை அரங்குகள், தீவிர சிகிச்சை பிரிவு பொதுப்படுக்கை பிரிவு என்று கிட்டத்தட்ட ஏழு தளங்களுடன் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது .

இந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இடையே நிர்வாக பிரிவு கட்டடம் உணவு தயாரிப்பு கூடம், மருத்துவ கிருமிநீக்க பிரிவு உட்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன .

சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய இந்த தாம்பரம் மற்றும் அதை சுற்றி இருக்கக்கூடிய மக்களுக்கு நவீன வசதிகளுடன் ஒரு மருத்துவ கட்டடத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

முதலமைச்சர் அதனை திறந்து வைத்து தற்பொழுது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் ஏழு கோடி மதிப்பிட்டிலே அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையும் திறக்கப்பட இருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பீட்டிலே ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டடத்தையும் மூன்று நகர்ப்புற துணை சுகாதார நிலையங்களையும் முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்க இருக்கின்றார்.

நகர்ப்புற அதாவது சென்னையை சுற்றி இருக்கக்கூடிய பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கும் தாம்பரத்தை சுற்றி இருக்கக்கூடிய மக்களுக்கும் சென்னை மையப்பகுதியில் கிடைக்கக்கூடிய மருத்துவ வசதியை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலே தாம்பரத்தில் இருக்கக்கூடிய அரசு தலைமைருத்துவமனையானது மேம்படுத்தப்பட்டிருக்கின்றது.

புதிய கட்டடத்தோடு ஏறக்குறைய 110 கோடி மதிப்பீட்டிலே ஏழு தளங்களை போட்டதாக ஐந்து ஏக்கர் பரப்பளவில் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. முதலமைச்சர் இந்த மருத்துவமனையை திறந்து வைத்து பொதுமக்களுடைய பயன்பாட்டுக்கு அர்ப்பணித்திருக்கின்றார். மேலும் அதை சுற்றி இருக்கக்கூடிய பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மூன்று நகர்ப்புற சுகாதார மையங்களையும் முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்திருக்கின்றார்.