Home தொழில்நுட்பம் “YouTube எடுத்த வரலாற்று முடிவு! 2026-ல் கிரியேட்டர்களுக்கு பண மழை”

“YouTube எடுத்த வரலாற்று முடிவு! 2026-ல் கிரியேட்டர்களுக்கு பண மழை”

நீங்க ஒரு யூடியூபரா, இல்ல ஒரு புது சேனல் ஆரம்பிக்கணும்னு ஐடியால இருக்கீங்களா? அப்படின்னா கண்டிப்பா உங்களுக்கு இந்த “டாலர்” பயம் இருக்கும்.பல நாள் கஷ்டப்பட்டு, ராத்திரி பகலா எடிட் பண்ணி ஒரு வீடியோவை அப்லோட் பண்ணுவோம்.

ஆனா அந்த வீடியோவுல ஏதாச்சும் ஒரு சென்சிட்டிவ் மேட்டர் இருந்தா போதும்.அடுத்த நிமிஷமே YouTube வந்து மஞ்சள் நிற டாலர் குறிகிட்ட போட்டு, உங்க வருமானத்துக்கு வேட்டு வச்சிரும். ஆனா இப்போ 2026 ஆரம்பத்துல YouTube நிறுவனம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டிருக்குது.

சும்மா இல்ல பாஸ். இத்தனை வருஷமா தடை செய்யப்பட்ட தலைப்புகள்னு எதையெல்லாம் ஒதுக்கி வச்சாங்களோ, அது எல்லாத்துக்குமே இப்போ பச்சை கொடி காட்டியிருக்காங்க.

இது YouTube கிரியேட்டர்களுக்கு கிடைச்ச ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் அப்படின்னுதான் சொல்லணும். அப்படி என்ன மாற்றத்தை கொண்டு வந்திருக்காங்க? எந்த மாதிரி வீடியோக்களுக்கு இனிமேல் முழு வருமானம் கிடைக்க போகுது? வாங்க முழுசா பார்க்கலாம்.

YouTube நிறுவனம் தன்னோட விளம்பரதாரர்களுக்கு ஏற்ற வகையில, அதாவது Advertiser Friendly கொள்கையில, ஒரு மிகப்பெரிய தளர்வை கொண்டு வந்திருக்காங்க.

இதுல ரொம்பவே ஆச்சரியமான விஷயம் என்னன்னா, இதுவரைக்கும் கான்ட்ரவர்சியல், அதாவது சர்ச்சைக்குரிய தலைப்புகள்னு சொல்லப்பட்ட கருக்கலைப்பு, அபோர்ஷன், தற்கொலை எண்ணங்கள், குடும்ப வன்முறை, டொமஸ்டிக் அப்யூஸ் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற மிக முக்கியமான சமூக பிரச்சனைகள் பற்றிய வீடியோக்களுக்கு, இனிமேல் முழு ஆட் ரெவன்யூ கிடைக்கும்.

முன்னாடி எல்லாம் இந்த மாதிரி விஷயங்களை வாயில சொன்னாலே, YouTube அல்காரிதம் அந்த வீடியோவை ஓரம் கட்டிரும். ஆனா இப்போ, கிரியேட்டர்கள் இந்த மாதிரி சென்சிட்டிவ் மேட்டர்களை பற்றி விவாதிக்கலாம்னு YouTube சொல்லியிருக்காங்க.

ஆனா இதுல ஒரு முக்கியமான கண்டிஷன் இருக்கு. அது என்னன்னா, நீங்க சொல்ல வர விஷயம் Non-Graphic வகையில இருக்கணும்.அதாவது காட்சிகளாகவோ, இல்ல விவரிப்புகளாகவோ, ரொம்ப கொடூரமா இல்லாம, ஒரு விழிப்புணர்வு தரக்கூடிய வகையில இருந்தா மட்டும்தான் காசு கிடைக்கும்.

“ஏன் YouTube திடீர்னு இவ்வளவு நல்லவங்களா மாறிட்டாங்க?”ன்னு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். இதுக்கு அந்த நிறுவனத்தோட பணமாக்கல் கொள்கை நிர்வாகி கார்னர் கவானக் ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்காரு. அவர் என்ன சொல்றாருன்னா,

“நாங்க எங்க விதிமுறைகளை திருத்த பார்த்தப்போ, அது ரொம்பவே கடினமா இருக்கிறதை உணர்ந்தோம். சமூகத்துக்கு தேவையான முக்கியமான கருத்துக்களை சொல்ல கிரியேட்டர்களுக்கு வருமானம் கிடைக்காம போறது சரியில்லைன்னு தோணுச்சு. அதனாலதான் இந்த மாற்றத்தை கொண்டு வந்தோம்” அப்படின்னு சொல்லியிருக்காரு.

இதோட அர்த்தம் என்னன்னா, இனிமேல் நீங்க ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுறீங்க, இல்லனா ஒரு டாக்குமெண்ட்ரி எடுக்குறீங்கன்னா, தைரியமா அந்த வீடியோவ மானிடைசேஷன் பண்ணிக்கலாம். குறிப்பா பாதிக்கப்பட்டவர்களோட சொந்த அனுபவங்கள், அல்லது ஒரு செய்தி நிறுவனத்தோட கவர்ச்சி இல்லாத முறையான செய்தி கவரேஜ் போன்றவற்றுக்கு இனிமேல் முழு அங்கீகாரம் கிடைக்கும்.

ஆனா இங்கதான் ஒரு பெரிய “NO” சொல்லியிருக்காங்க. எதற்கெல்லாம் இங்க தடை இருக்கு தெரியுமா?


குழந்தைகள் மீதான வன்கொடுமை, குழந்தை கடத்தல் மற்றும் உணவு உண்ணும் கோளாறுகள் தொடர்பான வீடியோக்களுக்கு எப்போதுமே விளம்பரம் கிடைக்காது. இதுல YouTube ரொம்பவே ஸ்ட்ரிக்டா இருக்காங்க. ஏன்னா சமூக ஒழுக்கத்தையும் பாதுகாப்பையும் சிதைக்கிற எந்த ஒரு விஷயத்தையும் நாங்க ஊக்குவிக்க மாட்டோம் னு அவங்க தெளிவா சொல்லிட்டாங்க.

இது உண்மையிலேயே ஒரு வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதே மாதிரி, நீங்க ஒரு வீடியோவுல வன்முறையை தூண்டுற மாதிரியோ, இல்ல அருவருப்பான, இரத்தக்கறை படிஞ்ச காட்சிகளையோ வச்சிருந்தா, இந்த புது ரூல்ஸ் உங்களுக்கு கை கொடுக்காது.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னன்னா, இத்தனை காலமா YouTube அல்காரிதத்திலிருந்து தப்பிக்க கிரியேட்டர்கள் பல வித்தைகள் செய்துட்டு இருந்தாங்க. உதாரணத்துக்கு, ஒரு வீடியோவுல “சாவு” அல்லது “கொலை” அப்படின்னு சொல்ல வேண்டிய இடத்துல “Unalive” அப்படின்னு குறுக்குவழி வார்த்தைகளை பயன்படுத்தினாங்க. இல்லனா எழுத்துக்களுக்கு பதிலா சிம்பல்களை போட்டு தப்பிச்சாங்க.

ஆனா இனிமேல் அந்த மாதிரி ஒளிஞ்சு விளையாட வேண்டிய அவசியமே இல்ல. நீங்க முறையான மொழியை பயன்படுத்தி அந்த விஷயங்களை பேசலாம். YouTube இப்போ கிரியேட்டர்களோட ஃபீட்பேக்கை ரொம்பவே மதிக்க ஆரம்பிச்சிருக்காங்க. போன வருஷம் ஜூலை மாதத்துல கூட, கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துறதுல ஒரு தளர்வை கொண்டு வந்தாங்க. வீடியோவோட முதல் ஏழு விநாடிகளில் கெட்ட வார்த்தை இருந்தா கூட, இப்போ முழு வருமானம் கிடைக்குது.

இதெல்லாமே எடுத்துக்காட்டுதான் — YouTube இப்போ ஒரு Adult & Mature பிளாட்ஃபார்மா மாறப்போகுது. இந்த மாற்றத்துல யாருக்கு அதிக லாபம்னு பாத்தீங்கன்னா, முறையான செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவத் துறையில இருக்கிற கிரியேட்டர்களுக்குத்தான்.

ஏன்னா அவங்கதான் இந்த மாதிரி கடினமான தலைப்புகளை பற்றி பேச வேண்டிய சூழ்நிலையில இருப்பாங்க. ஆனா இதுல ஒரு ஆபத்தான பக்கமும் இருக்கு. விளம்பரத்திற்காகவும், வியூஸ்களுக்காகவும், சென்சிட்டிவ் விஷயங்களை டிராமா பண்ணுறவங்க அதிகமா வளர வாய்ப்பு இருக்கு.

அதைத் தடுக்கத்தான் YouTube “Non-Graphic” அப்படிங்கிற அந்த ஒரு வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்றாங்க.அதாவது நீங்க என்ன பேசுறீங்கன்னதை விட, அதை எப்படி காட்டுறீங்கன்னதுதான் ரொம்ப முக்கியம்.

கடைசியா ஒன்னு — YouTube கொடுக்குற இந்த சுதந்திரம், ஒரு பெரிய பொறுப்பு. 2026 ஆம் வருடம் கண்டென்ட் கிரியேஷனுக்கு ஒரு பொற்காலமா இருக்கப்போகுது. ஏன்னா எந்த தயக்கமும் இல்லாம சமூக அவலங்களை நம்மால பேச முடியும்.

அதுல இருந்து வருமானமும் ஈட்ட முடியும்.உங்க சேனல்ல ஏதாச்சும் பழைய வீடியோக்கள் டாலர் பிரச்சனையில இருந்தா, இப்பவே போய் அதுக்கு Manual Review கொடுங்க.ஏன்னா புது ரூல்ஸ் படி, அது உங்களுக்கு பணத்தை அள்ளித் தரலாம்.YouTube இப்போ ஒரு புதிய பாதையில் பயணிக்க ஆரம்பிச்சிருக்கு.