உலகின் முதல் நாடாக கிரிபாத்தியில் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், அங்கு புத்தாண்டு கொண்டாட்டம் கலைகட்டியது. பசிபிக் பெருங்கடலில், ஆஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ள சின்னஞ்சிறு தீவு நாடான கிரிபாத்தியில்தான் புத்தாண்டு முதன்முதலாக பிறக்கிறது.
அந்த வகையில், இந்திய நேரப்படி நேற்று மாலை 3:30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. அதனைத் தொடர்ந்து, நியூசிலாந்துக்கு அருகிலுள்ள சாதம் தீவுகளில் (Chatham Islands) மாலை 4:00 மணிக்கும், நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் மாலை 4:30 மணிக்கும் புத்தாண்டு பிறந்தது. இந்த நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலைகட்டின.
குறிப்பாக, நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரம் வண்ணமயமாக காட்சி அளித்தது. ஆக்லாந்தின் ஸ்கை டவர் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக ஜொலித்தது.
பல்வேறு வண்ணங்களில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மாலை 6:30 மணிக்கும், ஜப்பானின் டோக்கியோவில் இரவு 8:30 மணிக்கும் புத்தாண்டு பிறந்தது.
துபாய்யில் நள்ளிரவு 1:30 மணிக்கும் புத்தாண்டு உதயமானது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நள்ளிரவு 2:30 மணிக்கும், இங்கிலாந்தின் தலைநகர் லண்டன்வில் இன்று அதிகாலை 5:30 மணிக்கும் புத்தாண்டு பிறந்தது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜனவரி 1-ஆம் தேதி காலை 10:30 மணிக்கும், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிற்பகல் 1:30 மணிக்கும் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை வரவேற்கும் கடைசி நாடு அமெரிக்காவுக்கு உட்பட்ட சமோவா தீவு ஆகும்.
பூமியின் நேர்கோட்டருகே அமைந்துள்ள பேக்கர் தீவில், இந்திய நேரப்படி ஜனவரி 1-ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. இதுவே உலகில் கடைசியாக புத்தாண்டு பிறக்கும் இடமாகும். ஆனால் அங்கு மக்கள் வசிப்பதில்லை. எனவே, மக்கள் வசிக்கும் பகுதிகளில் புத்தாண்டை கொண்டாடும் கடைசி தீவு அமெரிக்கன் சமோவா ஆகும்.
இதற்கிடையில், ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளிலும் 2026 புத்தாண்டு மலர்ந்தது. மக்கள் வானவேடிக்கைகள் வெடித்து புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
ஹாங்காங், சீனா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு வரவேற்பு வெகுவிமர்சையாக நடைபெற்றது. வானவேடிக்கைகள் கலைகட்டின. சிங்கப்பூர் நகரில் வானத்தை வண்ணமயமாக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
கண்கவர் வானவேடிக்கைகள் அனைவரையும் திகைக்க வைத்தன. உலகம் முழுவதும் புத்தாண்டு பிறக்கும் போது, துபாய்யில் நடைபெற்ற மயக்கும் வானவேடிக்கைகள் மற்றும் ஒளி-ஒலி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வியக்க வைத்தன. நீருற்றுபோல் பீரிட்டு வரும் வெளிச்சங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தன.








