Home உலகம் “அமெரிக்க அரசியல் முடிவு… இந்திய பொருளாதாரத்தில் அதிர்வு?”

“அமெரிக்க அரசியல் முடிவு… இந்திய பொருளாதாரத்தில் அதிர்வு?”

இந்தியாவுக்கு 500 விழுக்காடு வரி விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

இந்த மசோதா அமலுக்கு வந்தால், இந்தியா மற்றும் சீனா மீது விதிக்கப்படும் அமெரிக்க வரிகள் அடுத்த வார தொடக்கத்தில் 500 விழுக்காடு வரை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக குடியரசு கட்சியின் மூத்த செனட்டர் லின்சி கிரகாம் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், அந்த மசோதாவுக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்ததாக லின்சி கிரகாம் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் நேரடி வரி பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என கூறப்படுகிறது.