உலகப் புகழ்பெற்ற நயக்கரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா–கனடா எல்லையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலமாகும். நயக்கரா ஆற்றின் மீது அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, அதன் பிரம்மாண்டமும் சுவாசம் நிறுத்தும் அழகும் காரணமாக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
குளிர்காலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவும் போது, நயக்கரா நீர்வீழ்ச்சி பகுதி பனியால் உறைந்து அற்புதமான காட்சியை வழங்குகிறது.
தற்போது அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவின் காரணமாக, உலகப் புகழ்பெற்ற இந்த சுற்றுலாத் தலம் உறைந்த நிலையில் காணப்படுகிறது.
பனியால் உறைந்து காணப்படும் இந்த அபூர்வமான காட்சியை காண சுற்றுலா பயணிகள் பெருமளவில் அங்கு தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.








