Home உலகம் “ஐ.நா. பொதுச்சபையில் இந்திய வீர பெண்ணின் பதிலடி: பாகிஸ்தான் திணறியது”

“ஐ.நா. பொதுச்சபையில் இந்திய வீர பெண்ணின் பதிலடி: பாகிஸ்தான் திணறியது”

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியாவின் நிரந்தர பணிக்குழுவின் முதல் செயலாளரான படேல் கெலாட், கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார். இந்தியாவின் பதிலுரிமையை பயன்படுத்தி பேசியவர். பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அகற்றாமல் இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதிகளை, ஒப்படைக்காமல் பேச்சு வார்த்தை குறித்து பேசுவதற்கு தகுதியற்றதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஷெபாஸ் ஷெரீப் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறித்தும் முன்வைத்த கருத்துக்களை பெடல் கலாட் தகர்த்தெறிந்தார்.

அழிக்கப்பட்ட ஓடுபாதைகளும் எறிந்து போன ஹேங்கர்களும் வெற்றியாக தோன்றினார். அதனை பிரதமர் கொண்டாடி கொள்ளலாம் என கடுமையாக சாடியவர். அந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் தாமாகவே சண்டையை நிறுத்துமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் வைத்ததை வெளிப்படையாக குறிப்பிட்டார்.

இதன் மூலம் பாகிஸ்தானின் பாசாங்கு தனத்தை உலகின் முன் எடுத்து காட்டினார். மேலும் உலகலாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் கூட்டாளியாக இருப்பதாக கூறிக்கொண்டே ஒசாமா பின் லேடனுக்கு பாகிஸ்தான் 10 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கலம் கொடுத்தது மறுக்க முடியாத உண்மை என அவர் நினைவூட்டினார்.

அதற்கு மேலாக ஜம்மு காஷ்மீரில் 26 பொதுமக்கள் வழியான பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்ஸ் (Resistance Front) என்னும் அமைப்பை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் பாதுகாத்ததும் பயங்கரவாதத்திற்கு அந்நாட்டின் மறைமுக ஆதரவை காட்டுவதாக அவர் சுட்டி காட்டினார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்வைத்த பேச்சு வார்த்தைக்கான அழைப்பை இந்தியா நேரடியாக நிராகரித்திருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான நிலுவை பிரச்சனைகள் அனைத்தும் இருதரப்பு பேச்சு வார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்றும் இதில் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் இடமில்லை என்பதையும் இந்தியா தனது நிலைப்பாடாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

இத்தகைய வலுவான பேச்சின் மூலம் பெடல்கலாட் பாகிஸ்தான் உண்மையான சமாதானத்தை விரும்பினால் முதலில் பயங்கரவாதத்திற்கான ஆதரவை நிறுத்தி இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை கைவிட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.