Home உலகம் “அமைதியான செவ்வாயின் பின்னால் கொந்தளிக்கும் புயல் – ஏஐ கண்டுபிடித்த அதிர்ச்சி ரகசியம்!”

“அமைதியான செவ்வாயின் பின்னால் கொந்தளிக்கும் புயல் – ஏஐ கண்டுபிடித்த அதிர்ச்சி ரகசியம்!”

செவ்வாய் கிரகத்தைப் புகைப்படத்தில் பார்க்கும்போது அது ஒரே அமைதியான சிவப்பு நிற கோளாகத் தான் தெரிகிறது. அங்கே எந்தச் சத்தமும் இருக்காது என்று நாம் நினைக்கலாம். ஆனால், அந்த அமைதியின் பின்னால் ஒரு பயங்கரமான புயல் ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆமாம்! நம்ம பூமியில் அதிவேக புயல் வீசுவது போலவே, செவ்வாய் கிரகத்தில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயங்கரமான புயல் காற்று வீசுகிறது என்ற அதிர்ச்சி தகவலை ஏஐ (AI) கண்டுபிடித்துள்ளது.

முன்பு நாம் நினைத்ததை விட இது மிகவும் அதிகமானது. இந்த ராட்சத புயல்களுக்கு பெயர் “டஸ்ட் டெவில்ஸ்” (Dust Devils).

இது எப்படி தெரிய வந்தது என்றால், சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள ஒரு பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் குழு, முன்பு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அனுப்பிய 50,000-க்கும் மேற்பட்ட செவ்வாய் புகைப்படங்களை ஆய்வு செய்தனர்.

அனைத்துப் புகைப்படங்களையும் மனிதர்கள் நேரடியாக ஆய்வு செய்வது சாத்தியமில்லாததால், அந்தப் பணியை ஏஐ தொழில்நுட்பத்திடம் ஒப்படைத்தனர். அந்த ஏஐ, புகைப்படங்களில் இருந்த டஸ்ட் டெவில்கள் — அதாவது இந்த பிரம்மாண்டமான தூசி கோபுரங்கள் — எவ்வாறு, எவ்வளவு வேகமாக நகர்கின்றன என்பதை துல்லியமாக கண்டறிந்தது.

அப்படியென்றால் இதனால் என்ன பாதிப்பு? எதிர்காலத்தில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும்போது அல்லது அங்கே வாழ முயலும்போது, இந்த மணிக்கு 160 கிமீ வேக புயல்கள் ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

ஆனால் இதை இப்போதே கண்டுபிடித்தது ஒரு நல்ல விஷயம். ஏனெனில் இதற்கேற்ற மாதிரி பாதுகாப்பான விண்கலங்கள், ரோபோட்கள், குடியிருப்புகள் ஆகியவற்றை நாம் உருவாக்க முடியும்.

அதனால், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வது சாத்தியமா? என்ற கேள்விக்கு இந்த ஏஐ கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான படியை எடுத்து வைத்திருக்கிறது. பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிய தொழில்நுட்பம் நமக்கு வழிகாட்டுகிறது!