Home உலகம் சிறையில் இம்ரான் கானுக்கு என்ன ஆனது? கொலை குற்றச்சாட்டு அதிர்ச்சி!

சிறையில் இம்ரான் கானுக்கு என்ன ஆனது? கொலை குற்றச்சாட்டு அதிர்ச்சி!

இம்ரான் கான் எங்கே? என்ற கேள்வி பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கொல்லப்பட்டதாக தகவல்கள் பரவத் தொடங்கியதால் நாடு முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.

இந்த தகவல் முதலில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிவந்ததாக கூறப்படுகிறது. அந்நாட்டில் உள்ள சில செய்தி நிறுவனங்கள், அடியாலா சிறையில் இருக்கும் இம்ரான் கான் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற செய்தியை வெளியிட்டன.

இதனால் சூழ்நிலை மேலும் பதட்டமடைந்தது. குறிப்பாக, அடியாலா சிறையில் உள்ள இம்ரான் கானை பார்க்க அவரது சகோதரிகள் அங்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு சிறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தங்களை அங்கே தாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இம்ரான் கான் நலமாக இருந்தால் ஏன் அவர்களை தடுத்து நிறுத்தி தாக்கினர் என்ற கேள்வியையும் அவர் சகோதரிகள் முன்வைத்தனர். இதனால் சந்தேகங்கள் அதிகரித்தன.

இதற்கிடையில், பாகிஸ்தான் அரசு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. பின்னர், இம்ரான் கான் நலமுடன் இருக்கிறார், பரவிய தகவல்கள் அனைத்தும் வதந்தி என பாகிஸ்தான் அரசு தெளிவுபடுத்தியது. இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கானோர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறை முன்பு திரண்டு நிலைமையை அறிய முயன்று வருகின்றனர்.

இம்ரான் கான் பாதுகாப்பாக உள்ளாரா, உண்மையான நிலைமை என்ன என்பதைப் பற்றிய தெளிவான தகவல் பாகிஸ்தான் அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே தெரியும். ஆனால் தற்போது, இம்ரான் கான் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக அவரது சகோதரிகள் முன்வைத்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.