Home உலகம் “தோல்வி என அறிவித்த PSLV-C62 – கடைசி நிமிடத்தில் ஸ்வீட் சர்ப்ரைஸ்!”

“தோல்வி என அறிவித்த PSLV-C62 – கடைசி நிமிடத்தில் ஸ்வீட் சர்ப்ரைஸ்!”

பிஎஸ்எல்வி–C62 ராக்கெட் நேற்று ஏவப்பட்ட நிலையில், அந்த திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பிஎஸ்எல்வி–C62 ராக்கெட் தோல்வி தொடர்பாக எதிர்பாராத ஒரு திருப்பமாக, அதில் இருந்த ஒரு விண்கலம் செயல்படத் தொடங்கியுள்ளது என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட பிஎஸ்எல்வி–C62 ராக்கெட், பாதை மாறியதால் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. திட்டம் தோல்வி என அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, தற்போது திடீர் திருப்பமாக ஒரு விண்கலம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, அந்த விண்கலம் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ‘KID’ (கேஐடி) விண்கலம் என்பதும், அது தற்போது விண்வெளியில் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் பூமி கண்காணிப்பு உள்ளிட்ட 16 செயற்கைக் கோள்களை சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி–C62 ராக்கெட் நேற்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் மூன்றாம் கட்டத்தை கடந்த பிறகு நிலைநிறுத்தும் பாதையிலிருந்து விலகியதால், இந்த திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த ராக்கெட் மூலம் இந்தியா, மொரிஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 16 வணிக செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டிருந்தன. இதில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கிய ‘KID’ செயற்கைக் கோளும் இடம்பெற்றிருந்தது.

இந்த விண்கலம், விண்வெளியில் இருந்து மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பும் சோதனைக்காக உருவாக்கப்பட்டதாகவும், இந்த சோதனை ககன்யான் திட்டத்திற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பிஎஸ்எல்வி–C62 ராக்கெட் தோல்வியடைந்த போதிலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த KID விண்கலம் விண்வெளியில் செயல்படத் தொடங்கியிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. அந்த விண்கலம் தற்போது தரவுகளை அனுப்பி வருவதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ராக்கெட் குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்லாததால், இந்த விண்கலம் வேறு பாதையில் பயணித்து வருவதாகவும், அதை சரியான சுற்றுப்பாதையில் கொண்டு வர பாதை மறுகட்டமைப்பு (Re-orbiting) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட 16 செயற்கைக் கோள்களில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த KID செயற்கைக் கோள் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விண்கலம், விண்வெளியில் இருந்து பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், பிஎஸ்எல்வி–C62 திட்டம் தோல்வியென அறிவிக்கப்பட்ட சூழலிலும், ஸ்பெயின் நாட்டின் KID விண்கலம் செயல்படத் தொடங்கியிருப்பது ஒரு அதிர்ச்சியூட்டும் மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது. தற்போது அந்த விண்கலத்தின் பாதையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.