Home உலகம் “ஹாங்காங்கில் ரகசா புயல் அட்டகாசம்- 700 விமானங்கள் ரத்து”

“ஹாங்காங்கில் ரகசா புயல் அட்டகாசம்- 700 விமானங்கள் ரத்து”

சீனாவின் ஹாங்காங்கில் ரகசா புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஹாங்காங்கில் ரகசா புயல் தாக்குதலால் மழை கொட்டி தீர்த்தது. மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 700க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடல் அலையின் சீற்றம் தொடர்ந்து அதிகரித்து பலடி உயரத்திற்கு அலைகள் எழும்பின.

சீனாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மக்காவ் பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது. மேலும் தொடர் மழையால் சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. சீனாவின் ஷென்சென் பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

வாகன போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.