Home உலகம் ”அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை: ஆக்கிரமிப்புக்கு தக்க பதிலடி!

”அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை: ஆக்கிரமிப்புக்கு தக்க பதிலடி!

அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஒப்பந்தத்திற்கு ஒத்துவரவில்லை என்றால் போர் தொடுத்து ஈரானை ஆக்கிரமிப்போம் என அமெரிக்கா பகிரங்கமாக மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ராட்சி கடுமையான பதிலடி அளித்துள்ளார்.

தங்களின் துணிச்சலான ஆயுதப்படைகள் நிலம், வான் மற்றும் கடல் என அனைத்து பரப்புகளிலும் முழுமையாகத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஈரானின் உரிமைகள் பாதுகாக்கப்படும் நிலையில் மட்டுமே அமெரிக்காவுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.