கடலுக்கு அடியில் பல கோடி வருஷமா புதைஞ்சிருந்த ஒரு மிகப்பெரிய மர்மத்துக்கு இப்போ விடை கிடைச்சிருக்கு. இங்கிலாந்தோட வடகடல் பகுதியில் இருக்கிற சில்வர் பிட் அப்படிங்கிற மருமமான பள்ளம் . எப்படி உருவாச்சுங்கிறத பல தசாப்த கால விவாதத்துக்கு விஞ்ஞானிகள் இப்ப ஒரு முற்று புள்ளி வச்சிருக்காங்க.
அந்த பள்ளம் ஒரு பிரம்மாண்டமான விண்கள் தாக்குதல்களால உருவாச்சுன்னு அவங்க உறுதிப்படுத்தி இருக்காங்க. வாங்க இந்த அண்டவெளி மருமத்தை பத்தி விரிவா பார்க்கலாம்.
முதல்ல இந்த சில்வர்பிட் பள்ளம் எங்க இருக்குன்னு பார்ப்போம். யார்க்ஷர் கடற்கரையில் இருந்து சுமார் 80 மைல் தூரத்துல கடலுக்கு அடியில 700 மீட்டர் ஆழத்துல இந்த பள்ளம் இருக்கு.
2002ல பெட்ரோலிய புவியாளர்கள் இதை கண்டுபிடிச்சதுல இருந்து இது எப்படி உருவாச்சுன்னு ஒரு பெரிய விவாதம் நடந்துட்டே இருந்துச்சு. ஒரு தரப்பு இது விண்கள் தாக்குதலால உருவாச்சுன்னு சொன்னாங்க. இன்னொரு தரப்பு இது கடலுக்கு அடியில் இருக்கிற உப்பு பாறைகளோட இயக்கத்தால உருவான சாதாரண பள்ளம்னு சொன்னாங்க.
ஆனா இப்போ புதிய நிலாதிர்வு இமேஜிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விஞ்ஞானிகள் உண்மையை கண்டுபிடிச்சிருக்காங்க 4 கோடிய 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாடி யாக் மினிஸ்டர் தேவாலயத்தோடு அளவுள்ள அதாவது 160 மீட்டர் அகலம் உள்ள ஒரு பிரம்மாண்டமான சிறுகோல் கடல்ல மோதி இருக்கு.
இந்த மோதலால 100 m உயரத்துக்கு அதாவது கிட்டத்தட்ட 30 மாடி கட்டிடம் உயரத்துக்கு ஒரு மெகா சுனாமி ஏற்பட்டிருக்கு. அந்த நேரத்துல அந்த பகுதியில வாழ்ந்த உயிரினங்களுக்கு அது ஒரு பயங்கரமான நாளா இருந்திருக்கும்.
ஆனா 6.6 கோடி வருஷத்துக்கு முன்னாடி டைனோசர்களை அழிச்ச சிக்குலப் விண்கல தாக்குதல் அளவுக்கு இது மோசமானது இல்லை. இந்த ஆய்வு குழுவுக்கு தலைமை தாங்கின ஹாரிட் பாட் பல்கலை கழகத்தை சேர்ந்த யஸ்ஜி நிக்கல்சன் என்ன சொல்றாருன்னா, இந்த ஆதாரங்களை கண்டுபிடிச்சது ஒரு திரில்லிங்கான தருணம்.
வைக்கோல் போர்ல ஊசியை தேடுற மாதிரி இருந்துச்சுன்னு சொல்லிருக்காரு. முன்னாடி 2009ல் நடந்த ஒரு விவாதத்துல 80% விஞ்ஞானிகள் இது விண்கள் தாக்குதல் இல்லைன்னுதான் ஓட்டு போட்டாங்க. ஆனா இப்போ நிக்கல்சனோட குழு மறுக்க முடியாத ஆதாரங்களோட இதை நிரூபிச்சிருக்காங்க. பூமியில் இதுவரைக்கும் 200 விண்கள் பள்ளங்கள்தான் உறுதி செய்யப்பட்டிருக்கு.
கடலுக்கு அடியில வெறும் 33 தான் அடையாளம் காணப்பட்டிருக்கு. அதுல இந்த சில்வர் பிட் பள்ளம் ரொம்பவே பாதுகாக்கப்பட்ட ஒரு முக்கியமான பள்ளம்.
இந்த கண்டுபிடிப்பு நம்ம கிரகத்தை விண்கள் தாக்குதல்கள் எப்படி வடிவமைச்சதுன்னு புரிஞ்சுக்கறதுக்கும் எதிர்காலத்துல ஒரு விண்கள் மோதுனா என்ன நடக்கும்னு கணிக்கறதுக்கும் விஞ்ஞானிகளுக்கு ரொம்பவே உதவியா இருக்கும்.








