ஓரிரு நாட்களுக்கு முன் ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அதன் எதிரொழியாக அந்நாட்டில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் மீது கடுமையான பதில் தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. உக்ரைன் தலைநகர் கியூ மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகனை தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதில் நான்கு பேர் சிறுவர்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சமீபத்தில் உக்ரைன் ரஷ்ய எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை பலகட்டமாக நடத்தியது. குறிப்பாக மாஸ்கோவுக்கு அருகில் உள்ள சில ராணுவ தளங்களும் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளும் தாக்கப்பட்டன.
அதற்கு எதிர்வினையாகவே ரஷ்யா இப்போது கீவ் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி உள்ளது. நகரின் 10 பகுதிகளில் 33க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளன.
குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் என பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளே நேரடியாக தாக்கப்பட்டுள்ளன. இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தாக்குதலில் கீவ் நகரில் ஒரு 10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல குடும்பங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததாகவும் அடுத்த நொடியில் தங்கள் வாழ்க்கையே மாறிவிட்டதாகவும் இந்த தாக்குதலில் உயிர் பிழைத்தவர் கண்ணீரோடு கூறியுள்ளார்.








