Home உலகம் ”படுக்கையில் இருந்தவருக்கு கிடைத்த அதிர்ச்சி பரிசு!

”படுக்கையில் இருந்தவருக்கு கிடைத்த அதிர்ச்சி பரிசு!

சீனாவில் பல்வேறு வித்தியாசமான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதன்படி, பாட்டோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு போட்டி நடத்தப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு நீண்ட நேரம் படுக்கையிலேயே இருந்து எழுந்திருக்காமல் இருக்க வேண்டும் என்பதே போட்டியின் விதி. இந்த போட்டியின் விதிமுறைகள் மிகவும் தனித்துவமாக இருந்தன. போட்டியாளர்கள் படுத்திருக்கும் போது செல்போன் பயன்படுத்தலாம், புத்தகம் படிக்கலாம், உணவு வரவழைக்கலாம். ஆனால் உட்கார கூடாது, எழுந்து நிற்க கூடாது, கழிப்பறைக்கு செல்லவும் அனுமதி இல்லை. விதிகள் மீறப்பட்டால் உடனே போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் 240 பேர் பங்கேற்றனர். 24 மணி நேரத்துக்குள் 186 பேர் விதிமுறைகளை மீறியதால் வெளியேற்றப்பட்டனர்.

இறுதியாக, ஒரே ஒருவரான ஒரு இளைஞர் 33 மணி நேரம் 35 நிமிடங்கள் தொடர்ந்து படுத்திருந்தார். இதனால் அவர் போட்டியில் வெற்றி பெற்றார். பரிசாக அவருக்கு ₹37,000 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.